Sunday, June 17, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 14

கம கல்பதரோர் கலிதம் பலம்
சுகமுகாத் அம்ருத த்ரவ ஸம்யுதம்|
பிபத பாகவதம் ரஸமாலயம்
முஹு: அஹோ ரஸிகா: புவி பாவுகா:||
இது ஸ்ரீ மத் பாகவத த்யான ஸ்லோகங்களுள் ஒன்று. இதன் மொழிபெயர்ப்பாக
ஊத்துக்காடு வேங்கட கவி எழுதிய கீர்த்தனம்
ராகம் : கௌரிமனோஹரி
தாளம் : ஆதி
பல்லவி
பழமோ பழமோ பழம் பாகவத பழமோ பழமோபழம்
பவபயம் எனும் ஒரு இருளைக் கெடுத்த
ஸுக முனியெனும் கிளி கொத்திக் கொடுத்த || பழமோ ||
அனுபல்லவி
அழகான மா மறைத் தருமேலே அது
ஆருக்கும் அரிதான தன்மையாலே
முழு மோனப் பொருளுக்கு இவை போலே
முன் செய்த தீவினை எனும் நாரில்லாது
மூண்டிடும் பாவமெனும் வண்டு துளைக்காத || பழமோ ||
சரணம்
தேடித் திரிந்தாலும் காணக் கிடைக்காது
தெய்வ அருளைப் போலே கடையில் கிடைக்காது
ஆடிக் காற்றில் விழவோ எளிதாய் இருக்காது
அதற்கென்ன மற்றொரு காலம் ஆகட்டும்
அப்போது பார்ப்போம் என்றால் எப்போதும் கிடைக்காத || பழமோ ||

No comments:

Post a Comment