ப்ருது மன்னனின் விநயத்தையும் இனிமையான பேச்சையும் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.
முனிவர்களின் கூற்றுப்படி துதிபாடகர்கள் பாடத் துவங்கினர்.
மன்னவா! தாங்கள் ஸ்ரீமன் நாராயணனின் திருவவதாரமே. தங்கள் பெருமைகளை வர்ணிக்க உண்மையில் எங்களுக்குத் திறமையில்லைதான். மன்னன் வேனனது உயிரற்ற உடலிலிருந்து வெளிவந்தபோதும், உண்மையில் நீங்கள் மங்கல ரூபம் கொண்டவர். தங்கள் பௌருஷத்தை நினைத்தால் ப்ரும்மதேவர் உள்பட அனைவரும் மதி மயங்குகின்றனர்.
இருப்பினும் தங்களது கதாம்ருதத்தின் சுவையில் உள்ள ஆசையால், முனிவர்களது கட்டளையை ஏற்று எங்களால் இயன்றவரை தங்கள் பெருமைகளை விவரிக்கிறோம்.
தங்கள் புகழ் எல்லையற்றது. தாங்கள் தர்ம நெறிகளை ஒழுகுவதில் தலை சிறந்தவர். மக்களை அறநெறியில் செலுத்தி அவர்களைக் காப்பவர். தர்மத்திற்கு ஊறு விளைவிப்போரை தண்டிப்பவர்.
தாங்கள் ஒருவராகவே , மக்களைக் காப்பது, போஷிப்பது, மகிழ்விப்பது ஆகிய செயல்களையொட்டி லோகபாலர்களின் சக்தியை தாங்கி நிற்கிறீர்.
வேள்விகள் மூலம் விண்ணுலகங்களையும், மழை பொழிவதை ஒழுங்குபடுத்தி மண்ணுலகையும் காக்கிறீர்.
சூரியன்போல் உலகியலுக்கு அப்பாற்பட்ட மகிமை உடையவர்.
சூரியன் எட்டு மாதங்கள் தண்ணீரை உறிஞ்சியெடுத்து, பின் வர்ஷருதுவில் மழையாகப் பொழிந்து காக்கிறார்.
மலரிலிருந்து வண்டு மலரைப் பாதிக்காமல் தேனைச் சேகரிப்பதுபோல் சுபிக்ஷமான காலத்தில் வரிவசூல் செய்து, பஞ்சம் வரும் காலங்களில் அவற்றை மக்களுக்காகப் பயன்படுத்துகிறீர்.
நீர் ஏழைப்பங்காளன். தரையில் கால் வைத்து நடந்தாலும் அசுத்தம் செய்தாலும் பூமி அவற்றைத் தாங்குவதுபோல் , தன்னைத் தகைபவர்களையும் எதிர்ச் செயல் புரிவோரையும் பொறுக்கிறீர்.
தங்களது தோற்றமே மக்களை மகிழ்ச்சிப் படுத்துகிறது.
தங்கள் செயல்முறை மிகவும் ரகசியமானது. எவரும் அறியவொண்ணாதது. தங்களது செல்வப் பெருக்கு எவராலும் களவு செய்ய இயலாதது. பாதுகாப்பானது. பெருமைக்கும் நற்குணங்களும் வற்றாத ஊற்றாவீர். பகைவர்களால் அணுகவோ அடக்கவோ இயலாதவர்.
ஒற்றர் வாயிலாக மக்களின் எண்ண ஓட்டத்தை நன்கறிந்தபோதிலும், தன்னைப் பற்றிய நிந்தையையோ, புகழையோ செவி மடுப்பதில்லை.
பகைவனின் புதல்வனே ஆனாலும், தவறு செய்யாவிடில் தண்டிக்கமாட்டீர்.
சூரியனின் ப்ரகாசம் எந்தெந்தப் பகுதிகளிலெல் லா ம் பரவுகிறதோ அத்தனையும் உங்கள் ஆட்சிக்குட்பட்டதே.
தனது நற்செயல்களால் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துவதால் மக்கள் தங்களை ராஜா (ரஞ்சயிஷ்யதி ராஜா - மனம் மகிழச் செய்பவர்) என்றழைப்பர்.
உறுதியான எண்ணம் படைத்தவர். அசைக்க முடியாத கொள்கை உடையவர். சத்தியசந்தர். அந்தணர்களிடம் அன்பு பூண்டவர். மூத்தோரைப் பணிபவர். அனைத்து ஜீவராசிகளுக்கும் அடைக்கலமானவர். அவற்றை மதிப்பவர்.
பிறன் மனையைத் தாயென மதிப்பவர். தன் மனையைத் தன்னில் பாதியாய் எண்ணுபவர். குடிமக்களைத் தன் மக்களென பாலிப்பவர். ஞானிகளின் தொண்டர்.
தீயவர்களுக்கு யமன்.
மக்கள் அவித்யையால் இவரை சாதாரண மன்னன் என்று நினைப்பவர். ஆனால் இவர் ஆத்ம ஸ்வரூபமானவர்.
ஒரே வெண்கொற்றக் குடையின் கீழ் பூமண்டலம் முழுவதையும் ஆட்சி செய்பவர்.
கைகளில் வில்லேந்தி சூரியன்போல் நாற்றிசையிலும் தடையின்றி சஞ்சரிப்பார்.
மக்களின் ஜீவனோபாயத்திற்காக பசு வடிவம் தாங்கிய பூமாதேவியிடமிருந்து அனைத்துப் பொருள்களையும் கறப்பார்.
தன் வில்லம்புகளால் மலைகளைப் பிளந்து பூமியைச் சமன் செய்வார்.
இவரது வில்லின் நாணொலி கேட்டு தீயவர்கள் நடுநடுங்கி அழிந்துபோவர்.
ஸர்ஸ்வதி நதிக்கரையில் நூறு அஸ்வமேதயாகங்கள் செய்யப்போகிறார். நூறாவது யாகத்தில் இந்திரன் இவரது குதிரையைக் கவர்ந்து செல்வான்.
இவரது வில்லின் நாணொலி கேட்டு தீயவர்கள் நடுநடுங்கி அழிந்துபோவர்.
ஸர்ஸ்வதி நதிக்கரையில் நூறு அஸ்வமேதயாகங்கள் செய்யப்போகிறார். நூறாவது யாகத்தில் இந்திரன் இவரது குதிரையைக் கவர்ந்து செல்வான்.
தன் அரண்மனைப் பூங்காவில் ஸனத்குமாரரைச் சந்தித்து, அவருக்கு பரமபக்தியோடு பணிவிடைகள் செய்து, ஞானத்தைப் பெறுவார்.
இவரது பராக்ரமம் கொடி கட்டிப் பறக்கும்போது, அதைப் பற்றியே அனைத்து மக்களும் பேசுவர்.
இவ்வாறு கூறியவ்துதிபாடகர்களைக் கௌரவித்து சன்மானங்கள் அளித்தார்.
விதுரர் கேட்டார்.
ப்ருது எவ்வாறு பூமியைச் சமன் செய்தார்?
பூமியிடமிருந்து என்னென்ன பொருள்களைக் கறந்தார்?
இந்திரன் எதற்காகக் குதிரைகளை அபகரித்தான்?
ஆத்மஞானம் பெற்று எந்த லோகத்தை அடைந்தார்?
மஹரிஷியே!
ப்ருது மன்னரின் சரித்திரத்தை விரிவாகக் கூறுங்கள். அவரது புகழ் பகவான் நாராயணின் புகழே அன்றோ?
என்றார்.
ப்ருது மன்னரின் சரித்திரத்தை விரிவாகக் கூறுங்கள். அவரது புகழ் பகவான் நாராயணின் புகழே அன்றோ?
என்றார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment