ஸ்ரீ மத் பாகவதம் மோக்ஷத்தை மட்டுமல்ல கேட்ட மாத்திரத்தில் நான்கு புருஷார்த்தங்களையுமே அளிக்கவல்லது.
அதற்கு ப்ரமாணமாக, அதன் ஒரே ஒரு ஸ்லோகத்தைக் கேட்டதுமே காணாமல் போன ஸ்ரீ சுகர் வியாஸரிடம் திரும்பி வந்தார்.
அதென்ன ஸ்லோகம் சொல்கிறீர்கள்?
துஷ்ட விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள எங்கள் குரு உபதேசம் செய்தார்.
ஸ்ரீ வியாசார்யார்
அவரிடம் அழைத்து ப் போ வீ ர் களா?
யாகத்திலிருந்து வந்த குருபுத்ரன் இவர்தான் என்று தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டு சுகரை ஆசிரமத்திற்கழைத்துவந்தனர்.
திரும்பி வந்த மகனைக் கண்டதும் வியாசர் மிகவும் மகிழ்ந்தார்.
சுகர் ஸ்லோகத்தைப் பற்றி விசாரித்தார்.
நீங்கள் இவர்களுக்கு உபதேசம் செய்த ஸ்லோகம் மிக அருமையாக உள்ளது. என்னை மயக்குகிறது. யாரைப் பற்றியது?
எனக்கும் உபதேசம் செய்வீர்களா?
யாருக்கு பாகவதத்தைக் கொடுக்க வைத்திருந்தாரோ அவரே தேடி வந்து கேட்டால் வியாசருக்கு எப்படி இருக்கும்?
ஒரு ஸ்லோகமெஎன்ன? பதினெண்ணாயிரம் இருக்கிறது. உனக்காகத்தான் வைத்திருக்கிறேன்.
என்று சொல்லி ஸ்ரீ மத் பாகவதத்தை சொல்லி க் கொடுத்தார்.
வேத அத்யயனம் செய்வதுபோல் சந்தை திருவையாக அதாவது ஒவ்வொரு ஸ்லோகத்தையும் ஒரு முறை சொல்லி மூன்று முறை வாங்கிச் சொல்லி அர்த்தத்தோடு உள்வாங்கிக்கொண்டார்.

இன்றைக்கெல்லாம் ஸ்ரீ மத்பாகவத பாராயணம் நடக்கும் இடத்திற்குச் சென்று ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து பாருங்கள்.
ஸம்ஸ்க்ருதம் ஒரு வார்த்தை பு ரி யா விட்டாலும், அர்த்தம் தெ ரி யா விட்டாலும் பாராயண ஒலி கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கும்.
இவ்வளவு கர்ம வாசனைகளோடு ஸம்சாரத்தில் உழன்றுகொண்டிருக்கும் நமக்கே பாகவத சப்தம் ஆனந்தம் தருகிறதென்றால், ஸ்வயம் ப்ரும்மஸ்வரூபாய் விளங்கும் ஸ்ரீ ஸுகருக்கு எப்படி இருந்திருக்கும்?

ஆத்மானந்தத்தில் லயித்திருந்த அவர் இப்போது பாகவதானந்தத்தில் திளைக்க ஆரம்பித்தார்.
தினமும் பசுமாட்டை ஒரு நேரத்தில் பால் கறப்பார்கள்.
ஒருநாள் கோனாருக்கு, ஏதோ வேலையால் கறக்கவில்லை. நேரமாக ஆக, பசுமாடு பாலை வெளியே தள்ளிவிடவேண்டும் என்று தவிக்கும். கோனார் வரவில்லையெனில், தானே கால்களை மடிபோது போட்டு பீய்ச்சிவிடும். அதுபோல் மஹாத்மாக்களிடம் கருணை என்பது ஸ்வபாவமாக பெருகிக்கொண்டே இருக்கும். அதை யார்மீதாவது பொழிந்துவிடவேண்டும் என்பது மஹாத்மாக்களுக்கு ஒரு அவஸ்தை.

பாகவதம் தந்த பேரானந்ததில் திளைத்துக்கொண்டிருந்த சுகர் அதை யாருக்காவது சொல்லவேண்டுமே என்று தவித்து க் கொண்டிருந்தார்.
ஏழுநாட்களில் மரணம் என்ற சாபத்தோடு தனக்கு யாராவது உய்யும் வழி காட்டமாட்டார்களா என்று தவித்துக்கொண்டிருந்த பரீக்ஷித்தும் சுகரும் கங்கைக் கரையில் ஒன்று சேர்ந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment