சிற்றன்னையின் கொடுஞ்சொற்களால் புண்பட்ட துருவன் தாயின் சொற்படி காட்டுக்கேகினான்.
ஒருவன் தூய்மையான மனத்துடன் உண்மையாக இறைவனைத் தேடுவானாகில் அவனைத் தடுத்தாட்கொள்ள ஒரு உத்தம ஸத்குருவை அனுப்புகிறான் இறைவன்.
சீடன் இறைவனைத் தேடும் சமயத்தில் குருதான் சீடனைத்தேடி வருகிறார்.
அன்று வைகுண்டத்திலிருந்து நாரதர் கிளம்பும் சமயம் பகவானான ஸ்ரீஹரி அவரை அழைத்து தன் கழுத்திலிருந்த தாமரை மாலையை அவர் கழுத்திலிட்டு, "நாரதா இன்று உனக்கு லாபம்" என்று சொல்லி அனுப்பினார்.
நாரதர் தான் என்ன வியாபாரம் செய்கிறோமா, பகவான் ஏன் லாபம் என்று சொல்கிறார் என்று யோசித்துக்கொண்டே புறப்பட்டார்.
துருவனோ நாட்டைக் கடந்து காட்டிற்குள் நடக்கத் துவங்கினான்.
பூமிக்கு வந்து நாரதர் ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்த சமயம் குட்டிக் குழந்தை துருவனைக் கண்டார். கண்டதுமே அவன் யாரென்பதையும், அவனது நோக்கத்தையும் ஞான த்ருஷ்டியால் அறிந்துகொண்டார்.
அவனது குறுக்கே வழியை மறைத்து நின்றார்.
கோபத்தோடும், வைராக்யத்தோடும் தலையைக் குனிந்துகொண்டு விடுவிடுவென்று நடந்து கொண்டிருந்த துருவன் பாதை தடை பட்டதும் நிமிர்ந்து பார்த்தான்.
நெடுநெடுவென்ற உயரம், அமைதி ததும்பும் புன்னகைத் திருமுகம், கருணை பொங்கும் கண்கள், நீண்ட கைகள், தாமரை போன்ற கரகமலம், தாமரைத் திருவடிகள், சிவந்த திருமேனி, தோளில் மஹதி என்னும் வீணை, கழுத்தில் தாமரை மாலை.
நாரதமஹரிஷி என்று உணர்ந்தான். அன்னை சொல்லியிருக்கிறாள். ஏற்கனவே தன் வீட்டிற்கு அவர் விஜயம் செய்தபோதும் பார்த்திருக்கிறான்.
அவனது இரு கரங்களும் குவிந்தன.
வாஞ்சையுடன் கரகமலத்தால் குழந்தையின் தலையைத் தடவினார் நாரதர். அக்காட்சி துருவனின் தலையில் தாமரைமலரைச் சூட்டினாற்போலிருந்தது.
குழந்தை எங்க போற? உத்தானபாத மஹாராஜாவின் பையன்
துருவன்தானே நீ?
துருவன்தானே நீ?
தலையை ஆட்டினான்.
கண்கள் சிவந்திருந்தன.
என்ன இங்க சுத்தற? இது காடு. இங்க நிறைய மிருகங்கள்இருக்கும். இங்கேயெல்லாம் வரக்கூடாது. எதற்கு வந்த?
தபஸ் பண்ண..
தபஸா ? நீயா?
ம்ம்...
தபஸ் பண்ணி?
பகவானைப் பார்க்கப்போறேன்..
துருவா வீட்டில் ஏதாவது சண்டையா?
அதெல்லாம் இல்ல. நான் பகவானைப் பார்க்கணும்.
எதுக்கு?
பார்க்கணும் அவ்ளோதான்.
குனிந்ததலை நிமிராமல் டாண் டாண் என்று பதில் வந்தது.
ஸுருசி பொல்லாதவளாச்சே.. ஏதாவது சொன்னாளா?
குடும்பத்தில் சண்டைன்னெல்லாம் காட்டுக்கு வரக்கூடாதுப்பா. அப்படி பார்த்தா யாருமே நாட்டில் இருக்கமுடியாது..
அதெல்லாம் தெரியாது. பகவானைப் பார்க்கணும்..
நான் வேணும்னா உத்தானபாதன் கிட்ட சொல்லி சமாதானம் பேசி உன்னை சேர்த்துவெக்கட்டுமா?
இன்னிக்கு சண்டைன்னு நீங்க சேர்த்துவெச்சா
திரும்ப சண்டை வராதா? ஒவ்வொரு முறையும் நீங்க வரமுடியுமா?
அதெல்லாம் வேண்டாம். பகவானைப் பார்க்கணும்..
திரும்ப சண்டை வராதா? ஒவ்வொரு முறையும் நீங்க வரமுடியுமா?
அதெல்லாம் வேண்டாம். பகவானைப் பார்க்கணும்..
துருவா இங்க துஷ்ட மிருகங்கங்கள்ளாம் உண்டு. சின்ன சின்ன பூச்சிகள், கொசு, உன்னால் தூங்கக்கூட முடியாது..
நீங்க நாரத மஹரிஷின்னு எனக்குத் தெரியும். நீங்க ஊர் ஊராகப் போய் பகவானைப் பார்க்கணும்னு எத்தனை பேருக்கு எடுத்துச் சொல்லியிருக்கீங்க..
ஆமா..
ஆமா..
யாராவது ஒருத்தர் உங்க பின்னால் வந்தாங்களா?
...
இப்ப நான் ஒருத்தன் வந்திருக்கேன். என்னையும் திருப்பி அனுப்பறது நியாயமா?
அசந்துபோனார் நாரதர்.
சட்டென்று பக்கத்திலிருந்த தடாகத்தில் குதித்து இரண்டு தாமரை மலர்களைப் பறித்து வந்தான் துருவன்.
குழந்தையைக் காணவில்லையே என்று தேடினால் நாரதரின் சரணத்தில் தாமரைகளை வைத்துவிட்டு ஸாஷ்டாங்கமாக விழுந்துகிடந்தான்.
அவரது பாதத்தாமரைகள் அழகா? அல்லது அவன் பறித்து வந்த தாமரைகள் அழகா என்று அருகில் வைத்து ஒப்பு நோக்கினாற்போலிருந்தது அவன் செயல்.
குனிந்து குழந்தையை இரு கரங்களாலும் வாரியெடுத்தார் நாரதர். அப்போது அவரது கழுத்திலிருந்த தாமரை மாலை துள்ளி துருவன் கழுத்தில் விழுந்தது. பகவான் லாபம் என்று சொன்னதன் காரணம் புரிந்தது. உத்தம குருவிற்கு உத்தம சீடனே பெரிய லாபம்.
துருவன் சொன்னான்.
குருநாதா..
குழந்தையான எனக்கு பகவான் காட்சி தருவான் என்று அனுக்ரஹம் செய்யுங்கள். தங்கள் வாக்கைக் காப்பாற்ற பகவான் நிச்சயம் என்முன் தோன்றுவார்.
குழந்தையான எனக்கு பகவான் காட்சி தருவான் என்று அனுக்ரஹம் செய்யுங்கள். தங்கள் வாக்கைக் காப்பாற்ற பகவான் நிச்சயம் என்முன் தோன்றுவார்.
நெகிழ்ந்துபோனார் நாரதர். இப்படி ஒரு பக்தன் தேடினாலும் கிடைப்பானா?
துருவனை மனதார வாழ்த்திப் பேசத் துவங்கினார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment