வேனனின் கைகளை முனிவர்கள் கடைய அவற்றிலிருந்து ஒரு ஆணும் பெண்ணும் தோன்றினர்.
ப்ரும்மத்தின் தத்வம் அறிந்த ரிஷிகள் அவர்களைக் கண்டதுமே பகவத் அம்சமாய் வந்தவர்கள் என்று அறிந்துகொண்டனர்.
ரிஷிகள் கூறினர்.
இந்த ஆண்மகன் பகவான் விஷ்ணுவின் அம்சம். இவன் பெயர் ப்ருது. இவன் உலகைக் காக்கப் பிறந்தவன்.
இவளோ திருமகளின் அவதாரம். முத்துப் பற்களைக் கொண்ட இவள் பெயர் அர்ச்சிஸ். இவளை ப்ருது மணப்பான்.
உலகைக் காக்க மஹாவிஷ்ணுவே அவதரித்துள்ளார். அவருக்குப் பணிவிடை செய்ய மஹாலக்ஷ்மியே உடன் வந்துள்ளாள்.
அனைவரும் அவர்களது அவதாரத்தைக் கொண்டாடினர். ஆடிப் பாடினர். பூமாரி பொழிந்தனர்.
தேவர்களும் ரிஷிகளும் கூட்டம் கூட்டமாக வந்தனர். பல மங்கல வாத்யங்கள் முழங்கின.
ப்ரும்மதேவர் அங்கு வந்து ப்ருதுவின் வலது திருக்கரத்தில் ஸ்ரீ மன் நாராயணன் போன்ற ரேகைகளும் பாதத்தில் தாமரை ரேகைகளும் இருப்பது கண்டு ஸ்ரீ ஹரியின் அம்சமே என்று நிர்ணயம் செய்தார்.
எவருடைய கைகளில் வேறு ரேகைகளின் தொடர்பின்றி சக்ர ரேகை மட்டும் தனித்துள்ளதோ அவர் ஸ்ரீ ஹரியின் அம்சமே.
ப்ருதுவுக்கு முனிவர்கள் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தனர். மக்கள் பலவிடங்களிலிருந்தும் பட்டாபிஷேகத்திற்குத் தேவையானவற்றை ஆசையுடன் கொண்டு வந்து குவித்தனர்.
பஞ்சபூதங்களின் தேவதைகளும் காணிக்கைகள் கொடுத்தன.
ப்ருது மஹாராஜன் தன் தேவியோடு பட்டாபிஷேகம் செய்துகொண்டு இன்னொரு அக்னியோ என்னும்படி ஒளிர்ந்தார்.
விதுரரே!
குபேரன் அவருக்குத் தங்க சிம்மாசனம் கொடுத்தான். வருணன் நீர்த்திவலைகள் தெளிப்பதுபோல் குளிர்ந்த வெண்கொற்றக்குடை கொடுத்தான்.
வாயு வெண்சாமரங்களையும், தர்ம தேவதை புகழ் பரப்பும்மலர் மாலையையும், இந்திரன் ரத்தின கிரீடத்தையும், யமன் அனைவரையும் அடக்கியாளும் தண்டத்தையும் கொடுத்தனர்.
ப்ரும்மதேவர் வேதமயமான யும், ஸரஸ்வதி அழகான ஹாரத்தையும், மஹா விஷ்ணு சுதர்சனத்தையும், மஹாலக்ஷ்மி குறைவற்ற செல்வத்தையும்கொடுத்தார்கள்.
ருத்ரன் பத்து சந்திர பிம்பங்கள் பொறித்த கூரிய வாளையும், அம்பிகை நூறு சந்திர பிம்பங்கள் பொறித்த கேடயத்தையும், சந்திரன் அமுதமயமான குதிரைகளையும், தேவசிற்பியான துவஷ்டா அழகிய ரதத்தையும் கொடுத்தனர்.
அக்னி உயர்ந்த வில் கொடுத்தார். சூரியன் தன் கிரணங்களைப்போல் ஒளிமிக்க அம்புகளைக் கொடுத்தார். பூமாதேவி நினைத்த இடத்திற்குச் செல்லக்கூடிய யோகசக்தியுள்ள பாதுகைகளைக் கொடுத்தாள்.
ஆகாயமோ தினமும் அணிய தேவலோகப் பூக்களைக் கொடுத்தது.
சித்தர்களும் கந்தர்வர்களும் ஆடல் பாடல் களையும், வாத்தியம் இசைக்கும் கலையையும், திடீரென மறையும் அந்தர்தான வித்தையையும் அளித்தனர்.
சமுத்திரம் தன்னிடம் தோன்றிய சங்கத்தைக் கொடுத்தது.
ப்ருதுவைப் பாட துதி பாடகர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்துப் புன்முறுவலுடன் ப்ருது கூறினார்.
அன்பு மிக்கவர்களே! என் குணங்கள் பற்றிய புகழ் ஏது? இல்லாத குணங்களைப் பாடுவார்களா? தகுதியுள்ளவர்களைப் பாடுங்களேன்
இனி வரப்போகும் காலங்களில் என் புகழ் பரவினால் அப்போது பாடலாம். ஸ்ரீ மன் நாராயணனின் புகழில் மனம் கொண்டவர்கள் மனிதர்களைப் பாடமாட்டார்கள்.
சான்றோர்கள் புகழுக்குப் பாத்திரமான போதிலும் தங்கள் புகழைக் கேட்பதை விரும்பார். நானோ இன்னும் நற்செயல்களைத் துவங்கவில்லை. அப்படியிருக்க எனது புகழ் என்று ஏதுமில்லையே.
என்றார்.
ஆனால், முனிவர்களின் கூற்றுப்படி அவர்கள் ப்ருதுவைப் பாடத் துவங்கினர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:
Post a Comment